மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

14 April 2015

அம்மாண்ணா சும்மா இல்ல

அம்மாண்ணா சும்மா இல்ல ...
அவ இல்லனா நீ இல்ல...
உன்ன சுத்தி பாரு
அவ தான் உனக்கு
எல்லாம் ...

பத்து மாதங்களாய்
உன்னை சுமந்து ---
நீ கொடுத்த கஸ்டங்களை
இன்பமாய் எண்ணி---
தான் கஸ்டங்களை மறந்து
உனக்காக---
முத்தம் ஒன்று கொடுத்திருப்பாள்….
அதை
மறந்திருப்பாயா  நீ

அதுவோ
உன் அன்னையின்
விலையில்லா முத்தம்...

நீ அழும் வோளையிலே ---
தன் இரத்தத்தை
பாலாய் கொடுத்திருப்பாள்...

நீ வழர்ந்திட
தேயிந்த அவளுக்கு
முதியோர்  இல்லம் தான் வீடா…?

குடும்பங்களுடனே
வாழ ஆசை பட்டாள்
இன்றோ
அனாதை ஆக்கப்பட்டாள்

கண்ணிலே
தாரை தாரையாய் நீர் ஒழுக
அழுகின்றாள்

ஒரு பேதையை போல

அவள் கண்ணீரை
துடைக்க யாரும் இல்லை

தன் பிள்ளை என்று
ஒருவன் இருந்தான்

அவனோ !...

அன்னை மடிந்து விட்டாள் என்று
முதியோர்  இல்லம்
சேர்த்து  விட்டான்

பாவம்…
இந்த முதிர் வயதில்
என்ன செயிவாள்…?

தன் இளமையை
தன் பிள்ளைக்காக
விட்டுக்கொடுத்தாள்

அவனோ தன் இளமையை
சந்தேசமாய் களிக்கின்றான்
அவளுடனே,…

தன் அன்னையை
முதியோர் இல்லமதிலே
காவல் வைத்து விட்டு

தெரியாதவனாய்

அவனுக்கும்
முதிர் வயது என்று
ஒன்று உண்டு
என்று அறியாதவனாய்...