மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

17 February 2013

முதல் சந்திப்பு

யூத்தம் ஒன்று வருது
சத்தம் இல்லாமல்---
நிசப்தனாய் நான் இங்கு...
அவள் பார்வையில்
சிறை வைக்க பட்டேன்...
அது ஒரு அழகிய சிறை வாசம்
என் வாழ்வில் கண்டிராத
பொன்வசந்தம்

அவளின் ஓர பார்வை
சொல்லிடும்
பல பதில்கள்...
என்னை கண்டதும்---
சற்றே மறைந்து கொள்கிறாள்...

வெட்கத்தில் நாணியே
தலை குனிந்தவளாய்
என் அருகே---
அதுவே என்னவளின்
முதல் சந்திப்பு...

10 February 2013

உன் பாத சுவடுகள்


உன் பாத சுவடுகள்
ஒவ்வொன்றும்
எனக்கு பாசறைகளா---
இல்லை
எனது வாழ்க்கைகா...

இதோ !---
தனிமை என்னை வாட்டிட
உன் பாத சுவடுகளை
தேடியே...

உன் அருகில் இருத்தாலும்
சூரியன் என சுட்டெரிக்கின்றாய்---
வெகுதூரமாய் சென்றிட
காலன் என்னை தேடியே---

உன்னிடம் இருந்து
என்னை பிரித்து கொள்ள...

எனக்கு தெரியும்---

ஜெனனம் என்று ஒன்று உண்டென்றால்
மரணம் என்று ஒன்று உண்டென்று...”

ஏனோ !
உன்னை விட்டு பிரிகையில்
மரணம் இல்லா வாழ்வுக்கு
ஒரு அசை தான்...

உன் நினைவுகளோடு
மட்டும் வாழ்ந்திட---