மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

30 June 2012

வாழ்க்கை என்னும்


வாழ்க்கை என்னும்
சிறை கூண்டில் பயணித்தேன் ….
சுற்றியும் முற்றியும்
இருட்டறைகள் …..

ஓடுகிறேன் ஒழியை தேடியே---
ஓடி ஓடி கால்களும்
தளர்ந்து விட்டது…..

மன வலிமையும்
குறைந்து கொண்டே
போகிறது…..

வாழ்க்கை என்னும் பயணம்
என்னை துரத்திட---

ஓடுகிறேன் ஓடுகிறேன்
தினமும் பல இடங்களுக்கு
என் வாழ்வை தேடியே…..