மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

14 February 2012

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

13 February 2012

காதலர் தினம்விண்ணில் மிதகும்
விண் மீன் என
என் அவளின்
நினைவோடு---

எனது
காதலர் தினம்…

ஒவ்வொரு முறையும்
ஏமாந்து போகிறேன்…
அவளின் கனவுகளில் மட்டும்
உரையாடிக் கொண்டு

இந்த முறையாவது
என் நினைவுகளில்
வந்து சொல்லிடுவளோ
அந்த முன்று வார்தைகளையும்

இல்லை

ஏமாந்து விடுவேனோ!...
 
காத்திருக்கிறேன்

கையில் மலரை
வைத்துக் கொண்டு….

அலைகளின் ஓசையும்
அடங்கவில்லை

நம்பிக்கை
ஒரு புறம்….

பதட்டம்
மறு புறம்….

என்ன சொல்ல போகிறாள்

என்று

இம்முறையும்
கனவுகள் மட்டும்
எனக்கு
சொந்தம் ஆகிடுமோ

இல்லை

அவள் என் சொந்தம்
அகிடுவாளோ...

நண்பர்களாய் மட்டும்
பேசிக் கொண்டோம்…..

காதலனாய் என்று?...

என் உயிரையே
அவளுள் புதைத்து விட்டேன்…

வாழ்வது
நான் அல்ல
அவளுள் என் உயிர் வாசம்….

கனவுகளோடு
காத்து இருக்கிறேன்

அவளின் பதிலுக்காக
Ferbuary14
எனறும்
என் ௨யிர் வாழும்
என்
இனிய காதலின்
முச்சி காற்று
                     

09 February 2012

கடவுள் படைத்த உலகம்


மனிதத்தை படைதான்
இறைவன்....
மனிதம் வாழ்த்திட
அனைத்தையும் படைதான்....

     அனால்
        வாழ்வதோ
           மனிதம் அல்ல....

மனிதத்தை அழிக்கும்
 மனித ஆயுதங்கள்....

மலை என புறப்பட்ட
கருத்துக்கள்
புயலென ஆயுதங்களாய---
மனித இதயத்தை சிதைக்க

சிதைந்த
மனிதம் மலர்த்திட
சத்தியவாதிகள்  எத்தனை...?

சத்தியவாதிகளை நசுக்கிட
அலையும் கூட்டங்கள்
எத்தனை...?

சிந்தனை இல்லா
மனிதம் சிநதித்திருந்தால்---
சிந்தனைகள் கூட
மனிதத்தை
மலர செய்திடும்...
.

புதிதாய் பிறந்திடுவோம்


எங்கும் புதிதாய் பிறந்திடுவோம்...
எங்கும் புதிதாய் பூத்திடுவோம்...
எங்கும் சூரியனாய்
ஒளிந்திடுவோம்...
இரவில் நிலவினை போல
மலர்ந்திடுவோம்...

மனிதம் மலர்த்திட
மின்னலை
பிடிக்க சென்ற கரங்கள்
இடிகளின் பிடியில் சிக்கி
கரங்களை இளப்பதா---

ஐயோ பாவம்..!

பரிதவிக்கும்
இதையங்களுக்கு
கரம் கொடுக்க
யாரும் இல்லையே...!

என்ன வேடிக்கை...?

பார்க்கும் கூட்டங்கள்
ஆய்ரம்...
பொங்கி எழுந்தவனை
சொந்தங்கள் காட்டி
சிந்தநைகளை மாற்றி
கோளை ஆக்கும் கூட்டங்கள்
ஆயிரம்...
வசை பாடி
வெட்டி நியாம்
சொல்லும் கூட்டங்கள்
ஆய்ரம்...

கூடி வாழும்
உலகம் அதிலே---
கூட்டம் கூட்டமாய்
சுற்றி திரியும்
இளைஞர் படை...

வேலை தேடி அலையும்
கூட்டங்கள் ஒருபுறம்...
வாழ்க்கை தேடி
அலையும் கூட்டங்கள்
மறு புறம்...

மாசற்ற இளைஞன்
மற்றங்களை விரும்பினால்---
புதிய கருத்துக்கள்
புகுந்திடும்...
புதிய உலகம்
மலர்ந்திடும்...

இளைய தலைமுறையை காத்திடுவேம்


இதோ
நாட்டின் முதுகெலுப்பு
என்ற
இளைய சமுதாயம்
எழுந்திட
நாதி இல்லாமல்
திண்டாட்டம்....

எம்
இளைய சமுதாயத்தை
காத்திட
சட்டங்கள் இல்லையா....

இல்லை
சட்ட திரைகளில்
பண கட்டுகளா---

லஞ்சம்—லஞ்சம்—லஞ்சம்--
எல்லாம் அதனுள் தஞ்சம்...

தஞ்சம் புகுந்தவனுக்கோ
கொண்டாட்டம்....
கொடுத்தவனுக்கோ
திண்டாட்டம்....

வெற்றிகள் பல சூடி
வாழ வேண்டிய வயதில்
ருபாய் கட்டுகள் போட்டு
வெற்றியை பறித்து கொள்ளும்
அரக்க சமுதாயம்....

       “சாதிகள் இல்லை அடி பாப்பா”
         என்று சொன்னான் பாரதி....

ஆனால் இங்கு
பிறப்பு முதல்
இறப்பு வரை
சதியும் மதமும் தான்

எங்கு சென்றாலும்
முதலில்
கேள்வியாக வருவது
“எந்த சாதி
 எந்த மதம்”

இங்கே
சாதிக்கோ
பஞ்சம் இல்லை....
சாதிக்கான வீதிக்கும்
பஞ்சம் இல்லை....

ஆம்
எல்லாம் உள்ளது

ஆனால்
மனிதனை அளிக்கும்
ஒரே பஞ்சம்
பசி என்னும் கொடுமை

இதுவே
இளைய தலைமுறையை
திசை மாற்றி செல்லும்
முதல் படி...

பூஜை செய்திட


சிரிக்கும் நெஞ்சங்கள்
சிந்திய வியர்வை எல்லாம்
ஆறாக மாறிய
காலம்
மாறி விட்டது...
இரத்தங்கள் சிந்தி
சுதந்திரம்
பெற்றதோ---
                அன்று...

பெற்ற சுதந்திரம்
இரத்த வெள்ளத்தில்
மிதப்பதோ---
        இன்று...

காவி கட்டியவன்
துப்பாக்கி ஏந்தினால்
பூஜை செய்பவனுக்கு
வெடி குண்டுகள்
தான் கடவுளா---!

08 February 2012

மனிதனாய் வாழ அசை


மண் வாசம்
அது என் வாசம்…
பெண் வாசம்
அது கண் வாசம்…
மழை சாரல் தூவும்
உயிர் வாசம்…

கலைகள் பல எம் நாட்டில்
மடிந்ததே என்று
நாடோடியாய் இன்று---
 
புத்தகங்கள் கூட புரட்டி இருப்பான்
புத்தனாய் ஆகிடலாமா என்று---
புத்தியை தீட்டி இருந்தால்
சித்தனாய் கூட
ஆகியிருப்பானா என்னவோ…

விதியின் பூங்கயற்றில்
மனித வாழ்வு…
மனிதானாய் பிறக்கையில்
புனித வாழ்வு…
கண்ணியமாய் வாழ அசை பட்டான்…
என் நினைவும் ஏற்க் வில்லை
யேகியாய் வாழ்ந்த காலம்
போய்விட்டது…

வாழ அசை படுகிறேன்
புனிதனாய் அல்ல
மனிதனாய்---!...