மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

14 December 2011

சிட்டு குருவி


சிட்டு குருவி
சிட்டு குருவி---

எனக்கொரு
கதை சொல்லேன்
என்ன சொல்ல...!?

வட்ட வட்ட நிலவிலே
முத்தமிட்ட
அன்னை எவளோ...?
சத்தம் இட வேண்டாம்
காதில் சொலி விடு......

ம் ம் சொல்லுகிறேன்
அது ஒரு கதை அன்றோ----

கனவில் அது ஒரு அழகிய முகம்
நினைவில் அது உன் அன்னை அன்றோ

ம் ம் அப்படியா

எனக்கும் தானே
சொந்தம் என்று சொல்ல
யாரும் இல்லையே...!

         “இரு இரு
   நான் சொல்வதை கேள்....”

உன் கற்பனையின் அன்னை அவள்
உன்னை ஈன்றிடாத
தாய் அவள்....
இயற்கையும் தாலாட்டு படிட
நீயும் கற்பனையில்
செதுக்கிய உருவம் அவள்....
எந்த சிற்பியும்
செதுக்க இயலாத அழகு அவள்....

      நினைவில் உன்
      அன்னை அவள்....

கனவின் உலகம்
உன்னை வரவேற்க---
நீயும் அழகாய் தூங்கு
நானும் இங்கு உன்னுடனே
நாளைய விடியல் நமதே....!!!!!!

2 comments:

thalir said...

அழகான கவிதை!

Anonymous said...

இளந்தளிரே உந்தன் கொஞ்சும்
இளங்கைகளின் மேல் அமர்ந்து
கொஞ்சிப் பேச நான்வர
எங்கேயோ பார்க்கிறாயே இளந்தளிரே!

உங்களின் கவிதை அருமை!
தொடருங்கள் சகோ!
http://atchaya-krishnalaya.blogspot.com

Post a Comment