மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

19 March 2011

கருவறையே கல்லறையா....


கற்ப்பும் உயிரும்
ஒன்று தானே--- 
அதில் தோன்றிடும்
உயிரை மட்டும்
அழிப்பதேனடி----
பெண்ணே….!

பிறக்கும் முன்னே தங்கிய
 கருவறை கல்லறையா..?--“

தாய்மை என்பது
உனக்குரிய
புனிதமான இடம் 
என்று தெரியாதா…..

கண்ணெதிரே காணும்
உயிரை அழித்தால்
சட்டங்கள் பல…..

அனால்

உன்னிலே தோன்றிய
கருவும் உயிர் தானே---- 
அதை அழித்தாலோ--
சட்டங்கள் ஏது..?..
தண்டனைகள் எங்கே..?..

மொடானது மலரும்  முன்னே
  மடிய வேண்டிய கட்டாயம்……”

  சமுதாயமே--!...

அரசியல் சாசனத்தை
திருத்தி எழுது……

கருசிதைவுக்கு
மரணத்தை விட
கொடிய தண்டனை
என்று…….

1 comment:

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான வேண்டுகோள்

எத்தனை உள்ளங்களுக்கு இது கேட்கிறது

மறுபுறம்

காலத்தின் கட்டாயமாக சாதாரணமாகிய கொலையிது

Post a Comment