மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

07 March 2011

அழகு குட்டி செல்லம்


அழகாய் தூங்கிடும்
உன் கன்னங்களில்
முத்தம் ஒன்று வைத்திட
பட்ட கஷ்டம் எல்லாம்
இஷ்டமாய்…….

நீ என் அருகில்
இருகையிலே----

நானும் தூங்காமல்
விழித்திருப்பேனே
உன் அழகை
கண்டு ரசித்திடவே……..

உன் புன்னகையில்
குழி இருண்டு விழுந்திட---
உன் கன்னங்களை
செல்லமாய் கிள்ளிட……  
நீயும் மெல்லமாய்
அசைந்தாட------
பாதங்கள் இரண்டும்
விளையாடி-----
உன் கைகளின்
ஸ்பரிசங்கள்
மெல்
வருடிக் கொள்ள--------
நானும் இங்கு
என்னையே மறந்து
உன்னையே கொஞ்சும்
அன்னையாக---
என்னையே மாற்றிடும்
அழகு குட்டி செல்லமே………

1 comment:

Anonymous said...

அருமை நண்பரே.

Post a Comment