மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

06 March 2011

பாலைவனச் சோலை


அழகிய மரங்கள் பல….அழகாய் பூத்து கிடக்கும் பூக்கள்…. அழகிய புல் வெளிகள்….. பனித் துளியின் வருடல்கள்….. தத்தி தாவும் மான்கள்…. வெள்ளாடை போர்த்திய முயல்கள்…..

என பல உயிர்கள் வாழ்த்த ஒரு சோலைவனக் காடு அது......... 

அங்கு அழகாய் ஒரு ஜோடி புறாக்கள் மர கிளை அதிலே கூடு கட்டி வாழ்ந்து வந்தது வசந்தம் வீசும் அந்த வாழ்க்கையில் புயல் வீசிடும் என்று அறியாமலே 

கால மாற்ற மதிலே வானமோ பொய்த்து போனது மழையும் மண்ணை முத்த மிட மறுத்திட சுட்டெரிக்கும் சூரியனோ மண்ணின் நீர்த் துளிகளை இளுத்துக் கொண்டது. சோலை வனமும் பாலை நிலமாய் மாறியது. உயிர்கள் எல்லாம் இடம் பெயர்ந்தது---

ஆனால் அந்த இரு ஜோடி புறாக்கள் மட்டும் தான் இருந்த இடத்தை விட்டு போக மனமில்லாமலும் வாழ வழி இல்லாமலும் தவித்தது 
அந்த ஜோடி புறாக்களுக்கு ஒரு அசை தான் இருந்த அந்த வீட்டை மீண்டும் கட்டிட என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருக்கையில் மனிதன் ஒருவன் அந்த வழியே வர அந்த ஜோடி புறாக்களை நோக்கி நீங்கள் என்னோடு வந்து விடுங்கள் என்று கேட்டான். அதற்கு அந்த புறாக்களும் சரி உன்னோடு வந்து விடுகிறோம் அனால் ஒரு நிபந்தனை நீ இந்த மரத்தை தளிர்க்க வைக்க வேண்டும் என்றது. அவனும் சரி என்று பதில் கூற கேட்டான் நான் இந்த மரத்தை துளிர வைத்த பின்பு என்னோடு வரா விட்டால் என்ன செய்ய என்று.
அதற்கு அந்த புறாக்கள்----

      "நாங்கள் மனிதர்கள் அல்ல என்று பதில் சொன்னது" 

அவனும் சொன்ன படியே மரத்தை துளிர வைத்தான்

சிறிது நட்கள் சந்தோசமாய் வாழ்ந்திட மீண்டும் அவன் வந்தான் அந்த மரம் அழகாய் வளர்ந்து நின்றது அதை கண்டு மகிழ்தான் தனக்கு அந்த புறாக்கள் கிடைத்திடும் என்று நினைத்து. அவனை கண்டதும் அந்த புறாக்கள் அவன் கொண்டு வந்திருந்த கூண்டினுள்ளே சென்றது தன் சோகங்களை மனதோடு வைத்துக்கொண்டு…….

No comments:

Post a Comment