மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

02 March 2011

என் இதயம் ஒன்றும் ஊஞ்சல் அல்லநெஞ்சம் என்னும்

கூட்டினிலே-----

தஞ்சமாயி வந்தவளே-----

எல்லாம் வஞ்சம்

என்று சொல்லிட-----

நெஞ்சம் இங்கு

வலிக்குதடி……..உன் சிந்தனையில்

ஒரு போராட்டம்……

சந்திக்க

மறுத்து விட்டாயே------நானோ இங்கு

நினைவுகளுடன்------

உன் கனவுகளில்

தலை சாய்த்து

துய்ல் எழ--------

நீயோ அங்கு ஒன்றும்

அறியாதவளாய்-------இன்னும் எத்தனை

காலம் தான்

இந்த வேதனைசொல்

              பெண்ணே--!...

                                   சொல்------என் இதயம் ஒன்றும் ஊஞ்சல் அல்ல

நீ ஆடி விடு செல்ல----அது

அழகிய கனவுகள்

பூத்து கிடக்கும்

ஒரு பூந்தோட்டம்……..இன்றோ அதில்உன் நினைவுகள் என்னும்

வண்டுகள் பல----

என் கனவுகள் என்னும்

பூக்களை

மொய்த்து கொண்டு......         போதும் .........என் உயிரை உறிஞ்சும்

அழகிய பூக்களின்

மகரந்த தூளையவது

விட்டு விட்டு செல்சற்றே துடித்து கொண்டு

இருக்கட்டும்

இந்த அழகிய பூந்தோட்டமும்………அதில் பூத்து கிடக்கும் பூக்களும்………

No comments:

Post a Comment