மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

24 February 2011

பிள்ளை நிலா


கள்ளம் இல்லா பிள்ளை நிலா----
நீ என்னில் வந்த வெள்ளை நிலா.......
புன்னகை பூக்கும் வெள்ளை நிலா-----
நீ மண்ணில் பிறந்த செல்ல நிலா.......
தத்தி தவழும் செல்ல நிலா------
நீ கண்ணில் மிதக்கும் அன்பு நிலா....
கொஞ்சி உறவாடும் அன்பு நிலா-----
நீ கரங்களில் தவழும் பிஞ்சி நிலா.......
தத்தி பேசும் பிஞ்சி நிலா-------
நீ என்னில் பூத்த வெள்ளி நிலா.......
அழகாய் தூங்கும் வெள்ளி நிலா------
நீ மண்ணில் பிறந்த சொந்த நிலா.......

No comments:

Post a Comment