மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

20 February 2011

தாலாட்டு பாடிட யார் ?.........


அனனை சொல்லும்
பாட்டு தாலாட்டு----
மழலை எழுந்திட
அமைதியாய் தூங்கவைக்கும்
பாட்டு அது தாலாட்டு……
               
கொஞ்சி பேசும்
மழலை கேட்கும்
பாட்டு தாலாட்டு-----
மன அமைதியாய்
தூங்க வைக்கும்
பாட்டு அது தாலாட்டு………

கண்களை மெல்ல
அசர வைககும்
பாட்டு தாலாட்டு-----
மழலை இனிமையாய்
கேட்டு ரசிக்கும்
பாட்டு அது தாலாட்டு……..

அராராரோ பாடிட
தாயும் இங்கு
இல்லையே
சேயும் வளர்ந்தது
தனி மரமாய்……

பெற்ற அன்னை
சென்றதோ வெகு தூரம்……

உன்னையும் குப்பை
என கூடையில்
இட்டு  சென்றாளே------
 
அறியா வயதில்
செய்த தவறினை
திரித்திட யாரும்
இங்கு இல்லையே…….

விரலை எடுத்து
ஒன்று இரண்டு
எண்ண வேண்டிய வயதில்
சிறை கம்பிபய
எண்ணி பளுதடைந்து
போனானே……..  

No comments:

Post a Comment