மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

12 February 2011

அந்த விடுமுறை நாட்கள்

அந்த தெரு முனையில்
தான் அவள் வீடு…….
கொஞ்சம் அழகு தான்
யார் என்று தெரியாது ?.....
எங்கிருந்து வந்தாள்
என்பதும்  தெரியாது ?....
ஏதோ விடுமுறைக்காக 
வந்திருந்தாள்……..

கண்ணால பேசினாள்……
காதலை சொன்னாள்……
இதையங்களை மாற்றிக்
கொண்டோம்……

ஏதோ புது உணர்வு என்னிலே
காதலின் மோகத்தில்
என் கண்கள் கட்டப்பட்டன…….
கட்டப்பட்ட திரையிலும்
தெரிவது அவள்
முகம் மட்டுமே…….

இப்போதெல்லாம்
சுவாசிப்பது கூட
ஒரு வேலையாக 
தெரிகிறது…….

கவிதைகள் கூட
எழுதுகின்றேன் 
என்னையும்
கவிஞனாக்கி விட்டாயே…….

நினைவுகளோடும்
கனவுகளோடும்----
மட்டும்
உறவாடி கொள்கிறேன்------
நீ இல்லாத
இந்த பொழுதுகளில்……..

மீண்டும் அந்த விடுமுறை
நாட்களை எண்ணியே……….

No comments:

Post a Comment