மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

10 February 2011

அன்பின் தாலாட்டு

ஆராரோ ஆரிராரோ

என் கண்ணே நீயும்

கண்ணுறங்கு…….

நானும் இங்கு பாடுகிறேன்

உனக்கொரு தாலாட்டு……..

 

எதிரிகள் சூழ்ந்திட

நானும் இங்கு அனாதையாய்------

நீயே என் செல்வமடா-----

உன்னை தவிர வேறு

சொந்தம் இங்கு ஏது……

 

என் சொந்தங்களை தேடியே

கால்களும் தேயிந்ததடா-----

உன்னையும்

என் கையிலே சுமந்து கொண்டு

 

அனாதையாய் சுற்றி திரிந்தேன்

சுற்றி யாருமில்லை

நீ மட்டும் முழுமதியாய்……..

என்னோடு……..

 

உன்னையும்

கம்பீரமாய் வழர்ப்பேனடா-------

நீயும் இங்கு

மூட நம்பிக்கையை ஒழித்திட…….

 

மூடி வைத்த

அறிவு கண்களை தறப்பாயடா-------

தியாகம் செய்து

இந் நாடை காப்பாய்யடா------

 

தாயகம் போற்றும்

மகனாய் நீயும் வாழ்ந்திட

என் உயிரையும் உனக்காய் தருவேனடா-------


No comments:

Post a Comment