மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

07 February 2011

அம்மா......


அம்மா அம்மா அம்மா 
உன் அருகில் நான் இல்லை 
உன் மடியில் படுத்து
துயில் எழ……..

பத்து மாதங்கள் உன்னிலே தங்கி 
பட்ட வேதனைகளை
சுகமாக எடுத்து 
என்னை ஈன்றாயே-------

உன் கரங்களில் தவழும்
பூவாக என்னை
கட்டி அணைதாயே------

நான் மெல்லமே
தவழ்ந்து எழ
அதை அழ்காய் ரசிதாயே------- 

நான் நடை பயிலும் நேரமதிலே
என் கரங்களை பிடித்து உன்னோடு
௬ட்டிச் சென்றாய்-----

நான் பாதை தடுமாறும் நேரமதிலே
பாதை காட்டும் விழக்காய்
சுடர் விட்டு எரிந்தாயே-----

நான் இளைஞனாகிட
ஒரு நல்ல நண்பனாய்
என்னோடு நீயும் இருந்தாயே-------

இன்றோ உன் குரலை மட்டும்
கேட்கிறேன் எங்கிருந்தோ---
தினம் தினம் ….
என் அருகில் நீ இல்லை
என்றும் என் உயர் உன்னோடு…….
வெறும் ௬டாய் வாழ்கிறான்…….
உன்னை காண கண்கள்
ஏக்கத்துடன் காத்திருக்கின்றன------
கால சக்கரத்தின பிடியின் என் வாழ்வு……..

இப்போதெல்லாம்
ஏனோ யோசிக்கிறோன்
மீண்டும் அந்த வாழ்வு
கிடைத்திடுமா என்று……
உன் மடி ஓரமாய்
தலை சாய்த்து துயில் எழ------
அன்புடன்.....

No comments:

Post a Comment