மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

01 February 2011

காற்றோடு கலந்த சுதந்திரம்

வெற்றிக் கொடி நாட்டி
இரத்தம் மண்ணில் சிந்திட
உயிர்கள் பல மடிந்து
பெற்ற சுதந்திரம் - இன்று
காற்றோடு கலந்து போவதேன்-----

பாரதி கண்ட கனவு
கண்ணிலே நிற்கின்றது…….
கனவை நினைவாக்க

நினைத்தால்…….
கண்ணீரே பரிசாக

கிடைக்கின்றது……..
கண்ணோரம் நிற்கும் கனவை
நினைவாக்கிட யாரும் 

இல்லையே------

எம் தேசம் சதந்திர 

தேசம் என்று
மார் தட்டியே மடிந்தான் 

அன்று
ஆனால் இன்றோ....

வீதியில் வழையாடும் குழந்தை
மத்தியிலும் கொலை………

பிஞ்சி குழந்தைகளை பலாத்காரம்
செய்யும் கொடுமை……..

மனிதன் பணத்துக்காக பலரின்
உறுப்புக்களை விற்பதா------

கல்லூரி சென்றால் வீடு
தரும்பும் வரை ஏங்கும்
தாயின் மனம்……….
                          ஏன் ?....


எம் பாரதத்தாயே
இந்த கொடுமைகள்
உன் கண்ணில்

விழவில்லையா------

நீதி தேவதைகளே
கொடுமைகள் சூழ்ந்து
உன் கண்களை
மறைத்து விட்டதோ-----

இதோ உன் கண்களை
கட்டவுள்த்திட
எழுகின்றான்

                    - இந்தியன்

No comments:

Post a Comment