மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

25 January 2011

அழகு

கடலுக்கு அலை அழகு……

அலைக்கு கரை அழகு……

கரைக்கு மண் அழகு…..

மண்ணுக்கு வாசம் அழகு……

வாசத்திற்கு பூக்கள் அழகு…….

பூவுக்கு பெண் அழகு……..

பெண்மைக்கு தாய்மை அழகு…….

தாய்மைக்கு பாசம் அழகு……..

பாசத்திற்கு உயிர் அழகு……….

உயிருக்கு உடல் அழகு……..

உடலுக்கு வயது அழகு………

வயதிற்கு காதல் அழகு…….

காதலுக்கு புனிதம் அழகு……..

புனிதத்திற்கு வாழ்க்கை அழகு…..

வாழ்க்கைக்கு நாம் அழகு……..

நமக்கு காலம் அழகு……..

காலத்திற்கு மரணம் அழகு…..

மரணத்திற்கு கல்லறை அழகு……

கல்லறைக்கு நம்-----

      வாழ்க்கை எனனும்-----

                   பாடம் அழகு-----

No comments:

Post a Comment