மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

05 January 2011

இலங்கை தமிழனின் குமுறல்

வாழ்வு ஒரு போர்களம்
என்று நினைத்தால்
வாழ்க்கையே
போர்க்களமாகிவிட்டது…..


சீறி வரும்
ஏவுகணைகளும்
துப்பாக்கி தோட்டாக்களும்
எத்தனை அப்பாவி
மக்களின் உயிரை
பலி கொண்டது…..

எம் நாடு
தொலைந்து விடுமோ...
எனற பயம்தான்……

எம் உறவினர்கள்
தினம் தினம்
எம்மை விட்டு
 பிரிந்துபோவதை
தாங்கும் சக்தியெ
இழந்து விட்டது
இதையம்……

வாழக்கையே
வெறுத்து விட்டது----
வாழ முடியவில்லை----

பயத்தாலே
தினம் தினம்
சாவதை விட-----

என் அன்னை
என்னை ஈன்றிராமல்
இருந்திருந்தால்
இப்படிப்பட்ட உலகை
நான் காணவேணடி
இராது
இல்லை என்னை  
ஈன்ற உடனே
கொன்றிருக்கலாமே---------!---


இது
இலங்கை தமிழனின் குமுறல்

No comments:

Post a Comment