மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

16 December 2011

கற்பனை உலகம்


கற்பனை உலகம் அது
யாரும் கண்டிடாத
உலகம் அது...

அமைதியின் உலகம் அது
எல்லோர் கனவிலும் 
உதயம் அது...

நீதியின் உலகம் அது
எல்லோர் நினைவிலும் 
உதயம் அது...

ஒழுக்கத்தின் உலகம் அது
எல்லோர் மனதிலும் 
உதயம் அது...

பண்பின் உலகம் அது
எல்லோர் கண்ணிலும் 
உதயம் அது...

சமத்துவ உலகம் அது
எல்லோர் கையிலும் 
உதயம் அது...

அன்பின் உலகம் அது
எல்லோர் பாதையிலும் 
உதயம் அது...

கற்பனையின் உலகம் இது
என் கனவில் கட்டிய 
உலகம் இது...

14 December 2011

சிட்டு குருவி


சிட்டு குருவி
சிட்டு குருவி---

எனக்கொரு
கதை சொல்லேன்
என்ன சொல்ல...!?

வட்ட வட்ட நிலவிலே
முத்தமிட்ட
அன்னை எவளோ...?
சத்தம் இட வேண்டாம்
காதில் சொலி விடு......

ம் ம் சொல்லுகிறேன்
அது ஒரு கதை அன்றோ----

கனவில் அது ஒரு அழகிய முகம்
நினைவில் அது உன் அன்னை அன்றோ

ம் ம் அப்படியா

எனக்கும் தானே
சொந்தம் என்று சொல்ல
யாரும் இல்லையே...!

         “இரு இரு
   நான் சொல்வதை கேள்....”

உன் கற்பனையின் அன்னை அவள்
உன்னை ஈன்றிடாத
தாய் அவள்....
இயற்கையும் தாலாட்டு படிட
நீயும் கற்பனையில்
செதுக்கிய உருவம் அவள்....
எந்த சிற்பியும்
செதுக்க இயலாத அழகு அவள்....

      நினைவில் உன்
      அன்னை அவள்....

கனவின் உலகம்
உன்னை வரவேற்க---
நீயும் அழகாய் தூங்கு
நானும் இங்கு உன்னுடனே
நாளைய விடியல் நமதே....!!!!!!

09 December 2011

ஏ கிளியே ---


ஏ கிளியே ---
முத்து கிழியே--
கவிதை சொல்ல
நேரம் இல்லயா---

சொல்லி விடு
ஒரு பட்டேனும்....

கேட்டு விட்டு
சொல்கிறான்...

என் காதலிடம்....

எனக்கும்
ஒரு அழகிய
நண்பன் உண்டு என்று........

07 December 2011

மனிதம் எங்கே?.....


மதி இழந்தவன்---
கதி இழந்தான்....
சதி செய்தவன்---
கதி என்ன?....

மின்னலை என்றும்
தன் வசமாக்க நினைத்தான்....
இயற்கையின் பிடியில்
சிக்கி போன இடம் எங்கே?....

அந்த வானத்தை
தொட நினைத்தான்....
விணவெளி ஓடத்தை
செய்தான்....

பறவை என
பறக்க நினைத்தான்....
பறக்கும் தட்டை
கண்டறிந்தான்....

ஆயுதம் இல்லா
உலகை தேடினான்....
எங்கும் போர்
முழக்கங்கள் தான்....
பூக்களை நேசிக்க
மறந்தவன்
மனிதனை மட்டும்
நேசித்திடுவனா...!

மலைகளிலும் காடுகளிலும்
வழ்ந்தவன்
இன்று குடிசைகளிலும்
அடுக்கு மாடிகளிலும்மாய்
கேட்டால்
நாகரீகமாம்

எது நாகரீகம்?....

இன்று
நாட்டில் இல்லா
மனிதநேயம் தான்
           நாகரீகமா...!

இல்லை
மனித இதயத்தில்
வியாதியாய்
பரவி கிடக்கும்
கொடுமைகள் தான்
           நாகரீகமா...!

கொடுமைகள் நாட்டில்
அதிகமகிட தான்
சுதந்திரம் என்னும் 
பெயரை சொல்லி
அலைகின்றானோ
மனிதன் ஆயுதமாய்....

அதன் விளைவு தான்
தீவிரவாதம் என்னும்
கொடுமையா....

முதல் சுதந்திரமோ
அகிம்சையாய்
மாலை சுடியாதோ அன்று....
இன்றோ
இரத்த கட்டாறுகளாய்....

மனிதம் அழிந்தது....
மனித நோயம் ஓய்ந்தது....

மாண்டு போகும்
உலகம் அதிலே
மயமாய் போகும்
மனிதம் எங்கே?....

நம்பிக்கை


இலட்சிய வாழ்வில்
பயணம் செய்ய---
இலட்சியங்களை தேடியே
நம்பிக்கை தான் வாழ்க்கை
என்று நினைத்தால்
அந்த வானம்
உந்தன் கையில் எட்டிடுமே...!

காலை பனி துளி
சூரியனை கண்டு
ஒளிவது போல அல்ல
நம்பிக்கை....

அது
மனிதனின்
    முதுகெலும்பு....

வாழ்வின் ஆரம்பமும்
நம்பிக்கை....
வாழ்வின் முடிவும்
நம்பிக்கை....

நம்பிக்கை
இல்லை எனில்
வாழ்வும்
வீண் தானே----

06 December 2011

காதலின் நினைவு

வசந்த காலம்
அது என் இளமை காலம்
வசந்தங்கள் வீசிய பொற்காலம்
எனக்கென்று ஒரு பரிசாய்
இறைவன் கொடுத்த
அன்பு தேவதை அவள்

வானில் பூத்த
 நட்சத்திரங்களாய
அவள் இதய வாசல் திறந்திட
புதிதாய் பிறந்த உணர்வு

ஏதோ....
பாலைவனத்தில்
ஒரு துளி தண்ணீர்
கிடைத்த இன்பம்....

கடிதங்கள் பல எழுதினோம்....
சுவாசங்களாய் வாழ்ந்தோம்....
கற்பனை உலகில் மிதந்த்ட
காதல் தோணியாய்
நானும் அவளும்

“என்னோடு அவள் வாழ்வு”


என் வாழ்வின் அர்த்தம்
சொல்லிய அவளோடு வாழ்த்திட
இன்றும்
கடிதங்கள் எழுதுகின்றேன்
அவளின் கல்லறைக்கு
கனவில் மட்டுமாவது
வந்து விடுவாளோ
என்று எண்ணியே..!..

28 November 2011

ஹைக்கூ கவிதைகள்


எனக்கு தெரியும்
நீ விரும்புவது
என்னை அல்ல....
என் உயிரை என்று---
                    ---ரோஜா செடி
*****************************
நீ இன்றி
நான் அழகு இல்லை
என்பது எனக்கு தெரியும்
                          ---வண்டுகள்
*****************************
அவளின் நினைவுகள்
மட்டும் போதுமே
நான் வாழ்த்திட
                   ---காதல்
*****************************
நீ என்னை விட்டு பிரிந்திட
உன் நிழலாக
நான் இருப்பான்
                  ---கல்லூரி
*****************************
சொறூட்ட நானா உனக்கு
மழலையோடு
கதை சொல்ல
              ---நிலா
*****************************
உன் பிம்பம் என்மேல் பதிய
அலங்கரித்து கொண்டாய்
உன் நிழலாக
நான் இருப்பதில்லை
நிஜத்தில்
நான் ஒரு
      ---கண்ணாடி
*****************************
உனக்கு நிழலாய்
நான் இருக்க
என்னை அழிப்பது ஏன் ?..
                                ---மரம் 
*****************************

18 November 2011

ஏ நிலவே!...

ஏ நிலவே..!....
          மஞ்சள் நிறத்தவளாய்
          ஆடை அணிந்திட
          அந்தி சாயும் நேரமிது----
                      வெட்கத்திலே
                              புது பெண்ணாய்---
          மெல்லிய தலையை தூக்கி
          எழுந்தாயே----
          உன்
          வருகை கண்டு
          நட்சத்திர பட்டாளங்கள்
          படை எடுத்து நிற்கின்றன....
                      மண மகளாய்
                            உன்னை வரவேற்க....
          உன் கரங்களாய்
          இதோ!---
                      மேகங்கள்
                           உன்னை ஒளித்து கொள்ள....
          ஆனால்
          நீ ஒளிந்து கொள்ளும்
          மேகங்கள் கூட
          எதனை அழகு
                       பனி மூட்டமாய்.....
         ஏதோ----
          முதல் முதலாய்
          பிறந்த உணர்வு
                       தனிமையை அடிமையாக்கி
                                  என்னையும் மறந்து......

11 November 2011

பாரதம் உந்தன் கையிலடா .. . .


பாரதம் உந்தன்
கையிலடா....
கொஞ்சம் எழுந்து
நின்று பாரடா....

சுற்றி வரும் பூமி
சுழன்றிடும்.....
சுழல செய்யும்
கால சக்கரம்
உந்தன் கையிலடா.....

சிறை வைத்த உன்
கனவுகளுக்கு...
கொஞ்சம்
உயிர் கொடுத்த பாரடா....

வாடிய பூக்கள் கூட
புதிதாய் பூத்திடும்
உன் சாதனையின்
நாளை எண்ணியே!.....

27 October 2011

தேவதை அவள்...

தேவதை அவள் ஒருத்தி
என் கண் எதரே விழ--- 
விண் மீனாய்
என் பார்வையை
பறித்து சென்றாளே....
இன்றோ----
பார்வை இருத்தும்
தெரியா குருடனாய் 
அவளை தேடிய.......


23 October 2011

வேதனையாய்....


மலர் ஒன்று பூத்தது…..
வண்டொன்று மொய்த்தது.....
எனனென்று சொல்வேன்.....
சூடிக்கொள்ள யாரும் இல்லை.....
சூதாட்ட காரர்களின் பிடியில்
சிக்கி விட்டாளே.....
இன்றோ அவளை மொய்த்து
கொள்ள தினம் தினம்
எத்தனை வண்டுகள்.....
கல்லாய் போன
அவளின் ஸ்பரிசத்தில்---
பூவாக
ஒரு சின்ன இதயம்
வேதனையை
மட்டும் சுமந்து கொண்டு-------

09 October 2011

நிழல் என.......


நிழல் என திரிந்திடும்
என் கனவுகளுக்கு
விடை கொடு கிழியே---
விடை கொடு.....
உன்  நினைவில்  தலை சாய்த்திட....

நிஜம் என
ஒரு சொல் சொல்லடி கிழியே
உன் நிழலாய் நான் என....

காலனும் இன்று
என்னை தேடிய---

உன்னை விட்டு
வெகு தூர பயணம்....

நானும் செல்கிறேனடி கிழியே
என நினைவுகளை மட்டும்
உன்னிலே விதையாய
புதைத்து விட்டு......

03 October 2011

சிறு கவிதை


அவளின் நினைவுகள் கூட
இன்று எனக்கு சுமை தான் 
என்றாவது என்னவள் 
அறிந்து விடுவாளோ என்று..
*************************************************************************

நினைவுகளில் நீந்தும் 
மீன்கள் கூட ---
கனவுகள் என்னும் 
வலையில் சிக்கி..
வலிகளை சுமந்து கொண்டு...
*************************************************************************

எது நிஜம் என்று
தெரியாது....

தெரியாத ஒன்றை தேடியே 
விடை தேடி அலைகின்றான் 
புரியாதவனாய்....
*************************************************************************
ஆசைகள் இல்லாத
மனிதன் எங்கே....?
தேடுகிறேன்...
அதுவும் ஒரு ஆசை தானே.....
*************************************************************************

சித்திரமும் பேசிட
சிக்கிக் கொண்டான்...

சிற்பமென செதுக்கிய
அவன் வாழ்வு 
கீறல் விழுந்த சிலையாய்------
*************************************************************************

சுவடுகள் இல்லாத
மனிதம் இது

தேடுவதோ
          மரணமில்லா
                             வழ்வை……..
*************************************************************************

வழி தேடும் கண்கழுக்கு
காதல் ஒரு
பாவம் என்றால்----
கிழிந்த காகிதமாய் போயிடுவாய்----
உன் வாழ்வும் இங்கு
தண்ணீரில் மிதக்கும்
காகித கப்பலை போல----

16 September 2011

குழந்தை தொழிலாளிகள்சிந்தனை செல்வங்களாய்
எழ வேண்டிய சிறுவர்கள்
நித்தம் கூலிக்காக
உயிரை விடுவதா...

பேனா பிடிக்க வேண்டிய
கைகள் தீக்குச்சி கம்புகளை
பிடித்து தேய்ந்து போவதா …..

புத்தகங்களை படிக்க வேண்டிய
கண்கள் இரும்பு கம்பிகளை
பார்த்து கண்களை இளப்பதா....

பள்ளி செல்ல வேண்டிய
கால்கள் பட்டாசு அலைக்கு
செல்வதா ….

பாடம் கற்க வேண்டிய வயதில்
கால் வயிற்றை நிரப்பிட
செங்கல் ஆலைக்கு செல்வதா...


தொழிலாழிக்கு
எட்டு மணி நேரம் வேலை
பெற்று தந்ததே
மே தினம்….
.
  ஆனால்
  சிறுவர்கள்  என்றால்……

ஒவ்வொரு வீட்டில் எரியும்
தீபங்களிலும்
உங்கள் முகம் தானே தெரிகின்றது……

ஒவ்வொரு விழாக்களிலும்
வெடித்து சிதறுவது உங்கள்
வியர்வை துளிகளும்
இரத்தங்களுமே…..

ஏ முதலாளி வர்க்கங்களே…!
குழந்தைகளை வேலைக்கு
அமர்த்த கூடாது என்று
சட்டங்கள் இருந்தும்
உங்கள் பணம் தான்
சட்டங்களை மூடிவிட்டதோ…..

ஏ சமுதாயமே !...
     குழந்தைகளை சமைத்து உண்டது
                போதும்
         அவர்களை விட்டுவிடுங்கள்………

11 June 2011

அவள் இல்லையே......

விழிகள் தளர்ந்திட
தேடும் இடம் எல்லாம்
உன் நினைவுகள் இன்றி
வேறெதுவும்
இல்லை....

நானோ நடை
பிணமாய் தேடுகிறேன்
நீ இல்லை என்று
தெரிந்தும்.....


28 April 2011

காதலை சொல்லிட..


ஏட்டிலே எழுதினான்….
பாட்டிலே படித்தான்….
காதலை சொன்னான்
நாணத்தில் நின்றாள்....
 
புன்னகையில்
அவள் கன்னங்கள்
சிவந்து
குழி  இரண்டு விழுந்திட---
காவியமாய்
கவி பாடி நின்றான்....


தாழிட்ட
மெல்லிய இதயத்தின்
கதவுகளை அவள் 
திறந்திட--
தன் நினைவுகளை
அவளோடு
பதித்துக் கொண்டான்……

காதல் என்னும்
பூவை பறித்திடவே……