மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

21 December 2010

அருகில் இருக்கும் தெய்வம்

ஆயிரம் உறவுகள்
உண்டு
என்னை சுற்றி
         -ஆனால்
எனக்கென
துடிக்கும் ஒரு
இதையத்தை 
தேடினேன்-----
    -எங்கெங்கோ-----
அருகில் இருப்பதை
மறந்து---
      ----தாய்---

விலையில்லா முத்து

 

மாலையில் புத்திடும்
மலரிது…..
என்றும் எழுதப்படாத
காவியம் ஒன்று…..

காலை பனித்துளி
மெல்ல
கதவை தறந்திடவே---

ஆதவன் மெல்லமே
எழுந்தான்….
அதுவரை அமைதியாக
இருந்ந வீதி---
கலை கட்ட ஆரம்பித்தது….

பல​ வித இரைச்சல்கள்
மத்தியில்---
குழந்தையின் அழுகுரல்
மனதை உருக்கியது…..

எங்கே என்று தேடினால்
குப்பை தொட்டியில்
குப்பைகளின் மத்தியில்
       புரண்டு கொண்டிருந்து
தான் ஒரு அனாதை
       என்று தெரியாமல்…..

என்றென்றும்

உயிரோடு கலந்த 
உணர்வுகள்
என்றும் 
அழிவதில்லை.....

உணர்வுகளோடு கலந்த
உயிர்கள் 
என்றும் 
பிரிவதில்லை....

மரணம் வரை

என் மரணத்தின் 

வாசல்கள் 

வா வா என்று
முத்தமிட....
உன் நினைவுகளை
மட்டும்....
சுமந்து கொண்டு செல்கிறேன்
உன்னை விட்டு
வெகுதுரமாய....  
என் நினைவுகளை மட்டும்
உன்னுடனே
வைத்து விட்டு...

ஆசை

நிலவுக்குஆசை
                            அது
தேயாதிருக்க……..

மலருக்கு ஆசை
                             அது
உதிராதிருக்க…………

வண்டுக்கு ஆசை
                                 பூ
உதிராதிருக்க……..

கடலுககு ஆசை
                            அது
அழகாயிருக்க………..

சுரியனுக்கு ஆசை
                               அது
மறையாதிருக்க……….

பலருக்கு ஆசை
                        அவர்கள்
சாவாதிருக்க……..

         எனக்கு ஆசை
         என்
         நட்பு பிரியாதிருக்க……..

ஏக்கம்

அமைதியான வானம்
       அழகான பூமி----
அமைதியான இரவு
      அழகான நிலா---
மெல்லிய
கொலுசின் ஓசை
        யார் அவள்?...

தேடிப்பார்த்தேன்
கிடைக்க வில்லை
அலைந்தது திரிந்தேன்
காணவில்லை!....
      என்றும் அவளுக்காக...........

மனித வாழ்வு

சிதைந்து போன 
மனித வாழ்வு---
சிதைக்கப்பட்டது---
மனிதரல்ல.....
            அவனது
           உணர்வுகள்...

புதைக்கப்பட்டது---
புதையல் அல்ல---
                       புதிய
               பொக்கீஸங்கள.....

படைக்கப்பட்டது---
படைப்புகள் அல்ல---
மனித வாழ்வை
             சீர்குலைக்கும்
              ஆயுதஙங்கள்....

எடுக்கபட்டது---
உயிர்கள் அல்ல---
                       அவனது
                 உயிர் உறுப்புக்கள்....

கரைக்கப்பட்டது---
அஸ்திகள் அல்ல---
                        அவனது
                  மனகுமுறல்கள்....

விதைக்கப்பட்டது---
விதைகள் அல்ல---
முழைக்க துடிக்கும்---
                      புதைக்கப்பட்ட
                      மனித​ வாழ்வு..

கல்லறை பயணம்

புது உலகை
தேடி செல்லும்
பயணம் இது---
      கல்லறை பயணம்.....

மறு வாழ்வை
நோகி செல்லும்
பயணம் இது---
               கல்லறை பயணம்.....

மனித இதையங்களை
கரைய செய்யூம்
பயணம் இது---
               கல்லறை பயணம்.....

உலகில் நடக்கும்
போராட்டங்களை
விட்டு செலும்
பயணம் இது---
               கல்லறை பயணம்.....

காவி கட்டி
திரிந்தவன் செல்லும்
பயணம் இது---
                கல்லறை பயணம்.....

பட்டாடைகட்டி
திரிந்தவள் செல்லும்
பயணம் இது--
                கல்லறை பயணம்.....

எட்டு கால்களால்
தூக்கி செல்லும்
பயணம் இது---
               கல்லறை பயணம்.....

எல்லோர்க்கும்
சொந்தமாம்
இநத பயணம்.....

சொந்தம்
இல்லாதவனுக்கும் 
ஒரே சொந்தம் இந்த
                            கல்லறை பயணம்...
.

உணர்வுகள்


கவிதைகள் எல்லாம்

    ௨ண்மையும் அல்ல----

         பொயியும் அல்ல----

-ஆனால்

          அவை என்றும்

     மனித இதையத்தின்

மெய்யான உணர்வுகள்.....

ரோட்டோர பூக்கள்

பிறந்த இடமோ 
தெரியவில்லை
வழர்ந்த இடமோ 
வீதி...

தாய் தந்தை 
தெரியவில்லை---
தெரிந்ததெல்லாம் 
சிரிப்பு ஒனறுதான்.....

பசி என்பதை மறந்திட---
கையில் புத்தகங்களை
தாங்க வேண்டிய
கைகள்---
தட்டுக்கள் ஏந்தி
சில்லறை கேட்பதா !---

சோகங்களை மறைத்திட
போதைகளை 
தேடுவதா---

பாசம் என்பதை
தெரிந்திட இந்த
இளம் சிட்டுக்களுக்கு
யார்
?....

சுழலில் சிக்கிய வாழ்வு

சிந்தனை 
செல்வங்கள் 
எங்கே ?...

சிந்தும்
கண்ணீரும் 
எங்கே ?...

சீதையை தேடி 
வந்த ராமனும் 
எங்கே ?...

சீதனம் கொடுக்க
லெட்சுமியும் 
இல்லையே !....

வரண் கேட்டு 
வந்தவர்கள்
குணம் கேட்காமல்
பணம் கேட்டு 
எங்கோ ?....

வானில் பூத்த
மலராய் அவழ்---
சூடிட யார் ?.....

சுழலில் சிக்கிய
படகாய அவழ்---
மீட்டிட யார் ?....

கீறல் விழுந்த
சிலையாய் அவள்---
செதுக்கிட யார் ?....

புன்னகை
பூ பூத்தவள்---
                
இன்றோ---
கண்ணீரால் 
தன் வாழ்வை
தொலைத்து

கொண்டாள்.....    
      ௨திராத மலராய்—