மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

05 November 2017

காதலின் வலி


14 April 2015

அம்மாண்ணா சும்மா இல்ல

அம்மாண்ணா சும்மா இல்ல ...
அவ இல்லனா நீ இல்ல...
உன்ன சுத்தி பாரு
அவ தான் உனக்கு
எல்லாம் ...

பத்து மாதங்களாய்
உன்னை சுமந்து ---
நீ கொடுத்த கஸ்டங்களை
இன்பமாய் எண்ணி---
தான் கஸ்டங்களை மறந்து
உனக்காக---
முத்தம் ஒன்று கொடுத்திருப்பாள்….
அதை
மறந்திருப்பாயா  நீ

அதுவோ
உன் அன்னையின்
விலையில்லா முத்தம்...

நீ அழும் வோளையிலே ---
தன் இரத்தத்தை
பாலாய் கொடுத்திருப்பாள்...

நீ வழர்ந்திட
தேயிந்த அவளுக்கு
முதியோர்  இல்லம் தான் வீடா…?

குடும்பங்களுடனே
வாழ ஆசை பட்டாள்
இன்றோ
அனாதை ஆக்கப்பட்டாள்

கண்ணிலே
தாரை தாரையாய் நீர் ஒழுக
அழுகின்றாள்

ஒரு பேதையை போல

அவள் கண்ணீரை
துடைக்க யாரும் இல்லை

தன் பிள்ளை என்று
ஒருவன் இருந்தான்

அவனோ !...

அன்னை மடிந்து விட்டாள் என்று
முதியோர்  இல்லம்
சேர்த்து  விட்டான்

பாவம்…
இந்த முதிர் வயதில்
என்ன செயிவாள்…?

தன் இளமையை
தன் பிள்ளைக்காக
விட்டுக்கொடுத்தாள்

அவனோ தன் இளமையை
சந்தேசமாய் களிக்கின்றான்
அவளுடனே,…

தன் அன்னையை
முதியோர் இல்லமதிலே
காவல் வைத்து விட்டு

தெரியாதவனாய்

அவனுக்கும்
முதிர் வயது என்று
ஒன்று உண்டு
என்று அறியாதவனாய்...

17 February 2013

முதல் சந்திப்பு

யூத்தம் ஒன்று வருது
சத்தம் இல்லாமல்---
நிசப்தனாய் நான் இங்கு...
அவள் பார்வையில்
சிறை வைக்க பட்டேன்...
அது ஒரு அழகிய சிறை வாசம்
என் வாழ்வில் கண்டிராத
பொன்வசந்தம்

அவளின் ஓர பார்வை
சொல்லிடும்
பல பதில்கள்...
என்னை கண்டதும்---
சற்றே மறைந்து கொள்கிறாள்...

வெட்கத்தில் நாணியே
தலை குனிந்தவளாய்
என் அருகே---
அதுவே என்னவளின்
முதல் சந்திப்பு...

10 February 2013

உன் பாத சுவடுகள்


உன் பாத சுவடுகள்
ஒவ்வொன்றும்
எனக்கு பாசறைகளா---
இல்லை
எனது வாழ்க்கைகா...

இதோ !---
தனிமை என்னை வாட்டிட
உன் பாத சுவடுகளை
தேடியே...

உன் அருகில் இருத்தாலும்
சூரியன் என சுட்டெரிக்கின்றாய்---
வெகுதூரமாய் சென்றிட
காலன் என்னை தேடியே---

உன்னிடம் இருந்து
என்னை பிரித்து கொள்ள...

எனக்கு தெரியும்---

ஜெனனம் என்று ஒன்று உண்டென்றால்
மரணம் என்று ஒன்று உண்டென்று...”

ஏனோ !
உன்னை விட்டு பிரிகையில்
மரணம் இல்லா வாழ்வுக்கு
ஒரு அசை தான்...

உன் நினைவுகளோடு
மட்டும் வாழ்ந்திட---

09 July 2012

காவியம் சொன்ன காதல்


காவியம் சொன்ன காதல் இது....
காலம் சொன்ன பாடம் இது....
காதல் ஒரு சில்வண்டு
அதை மொய்த்திட ....
கிடைத்தோ புதிய ஆநந்தம்....

பூக்களை  எல்லாம்
பர்த்திருக்கிறேன்....
அனால்
ஏனோ ரசிக்கவில்லை
இன்று நேசிக்கிறேன்....
என்னோ தெரியவில்லை....

இது தான் காதலா....
புதிதாய் பிறந்து விட்டேன்....
உன்னுள்ளே....  
பிறந்த காதலை பறித்துவிடடாய்
நீ உன்னுள்ளே....
 
இன்று நாம்
காதல் என்னும் பூ உலகில்
ஒன்றிணைந்துள்ளோம்....

காலம் எல்லாம் நம் காதல்
பூத்து மலர்ந்திட
இறைவனை வேண்டி கொள்கிறேன்....